Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இது தெரிஞ்ச...தினமும் ஒரு கேரட் பச்சயாக சாப்பிடுவீங்க..!

இது தெரிஞ்ச...தினமும் ஒரு கேரட் பச்சயாக சாப்பிடுவீங்க..!

By: Monisha Fri, 05 June 2020 3:19:11 PM

இது தெரிஞ்ச...தினமும் ஒரு கேரட் பச்சயாக சாப்பிடுவீங்க..!

பச்சையாகவே உண்ணும் காய்கறிகளில் அளவிற்கு சுவை மிக்கது கேரட். கொழுப்புத் தொல்லையும், ஆண்மைக்குறைவு பிரச்சினையும் நெருங்கவே நெருங்காது. ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் கேரட் மிகவும் உதவுகிறது.

பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து, பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது.

கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டதாகும். ரத்தத்தைச் சுத்திகரித்து, விருத்தி அடையச் செய்கிறது. குடல்புண்கள், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க வழிசெய்கிறது.

carrots,healthy eyes,cancer,beta carotene,antioxidant ,கேரட்,ஆரோக்கியமான கண்கள்,புற்றுநோய்,பீட்டா கரோட்டின்,ஆன்டி ஆக்ஸிடன்ட்

காரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு பீட்டா-கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைப்பதால் கண்களில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, வயதான காலத்திலும் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகிறது.

கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

Tags :
|