Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மூளைத் திறனை மேம்படுத்துவதற்கு பாதாம் சாப்பிடுங்க

மூளைத் திறனை மேம்படுத்துவதற்கு பாதாம் சாப்பிடுங்க

By: vaithegi Sun, 18 Dec 2022 7:36:02 PM

மூளைத் திறனை மேம்படுத்துவதற்கு பாதாம் சாப்பிடுங்க

நட்ஸ் பற்றிய பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் ப்ரோட்டீன் இருக்கிறது. இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான்.அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ளன.

பாதாமில் விட்டமின்களும், தாதுசத்துகளும் அதிகமிருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய், சருமக் கோளாறுகள், பற்பாதுகாப்பு, இரத்தசோகை, ஆண்மைக்குறைவு, பித்தப்பைக்கல் போன்றவற்றை போக்குவதற்கு பாதாம் (Almond) துணை நிற்கிறது.

புரதம், நார்சத்தோடு உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இதில் உள்ளது. அதோடு வைட்டமின் E, துத்தநாகம், சுண்ணாம்பு சத்து (Calsium), இரும்பு சத்து, பாஸ்வரம்,தாமிரம், பொட்டாசியம், செலோனியம் மற்றும் மெக்னீசியமும் இதில் உள்ளது.

almonds .nuts ,பாதாம் .நட்ஸ்

புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் இரத்தக் கலைகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளைத் திறனை மேம்படுத்துவதற்கு பெரும் பங்கு வகிக்கிறது.இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரழிவு (Diabetes) நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

Tags :