Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தூதுவளை ரசம் செஞ்சி சாப்பிடுங்கள்... ஜலதோஷம், இருமல் எல்லாம் காணாமல் போயிடும்

தூதுவளை ரசம் செஞ்சி சாப்பிடுங்கள்... ஜலதோஷம், இருமல் எல்லாம் காணாமல் போயிடும்

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:53:21 PM

தூதுவளை ரசம் செஞ்சி சாப்பிடுங்கள்... ஜலதோஷம், இருமல் எல்லாம் காணாமல் போயிடும்

சென்னை: சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவஸ்தைப்படுகிறீர்களா. அப்போ தூதுவளை ரசம் செஞ்சி சாப்பிட்டா ஜலதோஷம், இருமல் எல்லாம் காணாமல் போய்விடும். உடலுக்கு நன்மையை கொடுக்கும் தூதுவளை ரசம் செய்யும் முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:
தூதுவளை இலைகள் – 1 கையளவுநெய் – 1 டீஸ்பூன்புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவுதக்காளி – 1-2 (பொடியாக நறுக்கியது)மிளகு – 1 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்பூண்டு – 3 பல்சாம்பார் பவுடர் – 3/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதுஉப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…
கடுகு – 1 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்நெய் – 1 டீஸ்பூன்

tamarind,tomato,turmeric powder,salt,sambar powder,doothuvala ,புளிச்சாறு, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பவுடர், தூதுவளை

செய்முறை: முதலில் தூதுவளை இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் புளியை ஒரு கப் சுடுநீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், தூதுவளை இலைகளைப் போட்டு, நன்கு வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து, அதன் பின் வதக்கிய தூதுவளை இலைகளைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் புளிச்சாறு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பவுடர், கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து, ஒருமுறை நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் புளியின் பச்சை வாசனை போய்விடும்.

பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, ரசத்தின் மேலே நுரை கட்ட ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும். இறுதியில் அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி விட வேண்டும்.

இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, ரசத்தில் ஊற்றினால், சுவையான மற்றும் சத்தான தூதுவளை ரசம் தயார்.

Tags :
|
|