Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • படித்ததெல்லாம் மறந்து போகிறதா? மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இவற்றை சாப்பிடுங்கள்!

படித்ததெல்லாம் மறந்து போகிறதா? மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இவற்றை சாப்பிடுங்கள்!

By: Monisha Fri, 04 Sept 2020 11:57:18 AM

படித்ததெல்லாம் மறந்து போகிறதா? மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இவற்றை  சாப்பிடுங்கள்!

பெரும்பாலான மாணவர்களை வதைப்பது இந்த ஞாபக மறதிதான். ராத்திரி, பகல் விழிதிறந்து படித்தாலும், அடுத்த அரைமணி நேரத்தில் படித்ததெல்லாம் மறந்துவிடும். சோர்வு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை என இந்த ஞாபக மறதி ஏற்படுத்தும் துணை விளைவுகள் இன்னும் கொடுமையானவை.

மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். எனவே மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்? என்று பார்க்கலாம்.

1) பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

memory loss,brain,memory,diet,health ,ஞாபக மறதி,மூளை,நினைவாற்றல்,உணவு,ஆரோக்கியம்

2) மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.

3) நினைவாற்றலில் சேமித்த செய்திகளை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ள, உணவால் கிடைக்கும் சத்துக்கள் மூளைக்கு உதவுகின்றன. முழு தானியங்களை சுண்டல் வகைகளாக அப்படியே சாப்பிடவேண்டும்.

4) சிவப்பு பரங்கிக்காயில் உள்ள விதையில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஜின்க் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

5) நல்ல கொழுப்பு உள்ள உணவுகளும், வைட்டமின் சி உள்ள ஆரஞ்ச், எலுமிச்சை, சாத்துக்குடி நெல்லிக்காய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கூடவே பச்சைக் கீரைகள், தக்காளியை சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாகும்.

6) நினைவாற்றல் மேம்படபோதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவை தவிர்க்கவே கூடாது.

Tags :
|
|
|