Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஞாபக சக்தியை மேம்படுத்த…..இதை சாப்பிட்டு பாருங்கள்

ஞாபக சக்தியை மேம்படுத்த…..இதை சாப்பிட்டு பாருங்கள்

By: vaithegi Sun, 12 June 2022 4:57:14 PM

ஞாபக சக்தியை மேம்படுத்த…..இதை சாப்பிட்டு பாருங்கள்

உங்களால் எந்த ஒரு விசயத்திலும் போதிய கவனம் செலுத்த முடியவில்லை அல்லது அடிக்கடி மறதி ஏற்படுகிறதா?. அப்படியானல் பின்வரும் உணவு பொருள்களை சாப்பிடுங்கள்

ஆரோக்கியமான அதேசமயத்தில் சரிவிகித உணவானது, உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறதுஆரோக்கியமான உணவுகள், நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. ஆன்டி ஆக்சிடண்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளிட்டவைகள் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

brain,memory,vitamins ,மூளை, ஞாபக சக்தி, வைட்டமின்கள்

மூளை ஆரோக்கியத்திற்கு பூசணி மற்றும் ஆளிவிதை சிறந்தவை. இந்த விதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன, இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும். முந்திரி (Cashew) : முந்திரி ஒரு நல்ல மெமரி பூஸ்டர்.

காரட் சாப்பிட்டு வர ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக் கொள்ளும்.

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும்.

க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

பெர்ரிஸ்: பெர்ரிப் பழங்களில் அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும்

மூளையின் செயல்பாட்டிற்கு துணைபுரியும் மற்றொரு முக்கியமான உணவு அவகேடோ ஆகும்.

பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

டார்க் சாக்லேட்களில் கோகோ உள்ளது. கோகோவில், ஆன்டி ஆக்சிடண்ட்களின் ஒருவகையான பிளேவனாய்டுகள் உள்ளது. ஆன்டி ஆக்சிடண்ட்கள், மூளையின் செயல்பாட்டுக்கு துணைபுரிவதோடு மட்டுமல்லாது, ஞாபக சக்தி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாவண்ணம் காக்கின்றன.

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும்

Tags :
|
|