Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சியா விதைகளை எலுமிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்

சியா விதைகளை எலுமிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்

By: Nagaraj Fri, 18 Dec 2020 7:46:58 PM

சியா விதைகளை எலுமிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சியா விதைகளை எலுமிச்சைசாறுடன் கலந்து குடிக்கலாம். இந்த சிறிய விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.

இன்றைய வாழ்க்கை முறையால் உலகில் பெரும்பாலானவர்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுவது உயர் இரத்த அழுத்தம்.

ஒருவரது சாதாரண இரத்த அழுத்த வரம்பு 120/80 mmHg. இந்த வரம்பு 140/90 mmHg-க்கு அதிகமாகும் போது, அது உயர் இரத்த அழுத்த பிரச்சனையாக உருவெடுக்கிறது. இதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிடில் அது மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களுக்கும் வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவர்கள்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சியா விதைகளை எலுமிச்சைசாறுடன் கலந்து குடிக்கலாம். இந்த சிறிய விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.

doctor,chia seeds,blood pressure,pills ,மருத்துவர், சியா விதைகள், இரத்த அழுத்தம், மாத்திரைகள்

இவற்றில் உள்ள நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பல நுண் ஊட்டச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க பேருதவியாக அமைகின்றன.

சியா விதைகளை ஒரு டம்ளர் நீரில் 1 மணிநேரம் ஊற வைக்கவும். அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொண்டு சுவைக்காக தேன் சேர்த்துக் குடிக்கலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன்களை பெறலாம். உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்காக மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் இதனை பருகும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தொடங்கலாம்.

Tags :
|