Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வைட்டமின் ஏ, பி நிறைந்த கொத்தமல்லி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வைட்டமின் ஏ, பி நிறைந்த கொத்தமல்லி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

By: Nagaraj Sun, 30 July 2023 10:48:52 PM

வைட்டமின் ஏ, பி நிறைந்த கொத்தமல்லி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சென்னை: கொத்தமல்லி அதிகம் சாப்பிடுகிறவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. கொத்தமல்லி வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் எரிச்சலை தடுக்கும். பசியை தூண்டும். உணவையும் எளிதாக செரிக்கச் செய்கிறது. இதன் நார்ச்சத்து வயிற்றில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். நார்ச்சத்து ,இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ,வைட்டமின் பி ஆகியன இதில் அதிகம் உண்டு.

இன்சுலின் சுரப்பை தூண்டிவிடும் வல்லமை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோய் அபாயத்தையும் தள்ளிப் போடுகிறது. மூல நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்தாகும் .கல்லீரலை பலப்படுத்த கொத்தமல்லி உதவும்.

ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையை கழுவி சுத்தம் செய்து, மிக்ஸியில் அரைகுறையாக அரைத்து, அப்படியே வாயில் போட்டு குதப்ப வேண்டும். இப்படி தினமும் இரண்டு வேலை செய்தால் வாய்ப்புண், வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் மறைந்து விடும்.

memory,enhancing,coriander,immunity,energy ,நினைவாற்றல், மேம்படும், கொத்தமல்லி, நோய் எதிர்ப்பு, சக்தி


கொத்தமல்லி இலை ,தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு அரைத்து இதில் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் மென்மை யாகவும் பொலிவுடன் இருக்கும்.

கொத்தமல்லி இலையை நன்றாக விழுதாக அரைத்து நெற்றியில் பூசிக்கொண்டு, கொஞ்ச நேரம் படுத்திருந்தால் எப்படிப்பட்ட தலைவலியும் சரியாகிவிடும். கொத்தமல்லி இலைகளைக் கழுவி அரைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுக்கவும். சீரகப்பொடி ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு கலந்து கொடுக்கவும். அஜீரணத்தை போக்கி,பசி எடுக்கச் செய்யும் மருந்து இது.

கொத்தமல்லியை உடைத்துப் பார்த்தால் அதற்குள் துளியூண்டு சைஸில் இரண்டு விதைகள் இருக்கும். இந்த விதைகளை பாலில் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் மேம்படும்.

Tags :
|