Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் போதாது... ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் போதாது... ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

By: Nagaraj Thu, 22 Sept 2022 10:33:44 PM

வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் போதாது... ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

சென்னை: வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் போதுமா... அது உடல் ஆரோக்கியத்தை கொடுக்குமா? உணவை அறிந்து சாப்பிடுங்கள்...ஆரோக்கியமாக வாழுங்கள்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும் உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு என்னென்னவோ பாதிப்புகள்... நோய்கள்... துன்பங்கள்! நாம் சாப்பிடும் உணவு வாய்க்கு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா... உடலுக்கு ஆரோக்கியமானதுதானா என்று யோசிக்க வேண்டும்.

'தினமும் சத்தான உணவுதான் உண்கிறோம்’ என்று சொன்னாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டி, முளைகட்டிய பயறுகள், ஜூஸ் வகைகள் மற்றும் அயல்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் காய்கறிகள், பழங்களைத்தான் பெரும்பாலானோர் உண்கிறோம்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலிருந்து ஓரளவு சத்துக்களைத்தான் பெறமுடியும். ஆனால், நாம் உண்பதற்குத் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே மூலிகை உணவாக அமைந்துவிட்டால், உடலுக்குத் தேவையான அத்தனை அற்புதமான சத்துக்களும் ஒட்டுமொத்தமாகக் கிடைத்துவிடும்.


மூலிகைத் தாவரங்களின் மகத்துவத்தை அறிந்து அதன் பலன்களை உணர்ந்து, உணவாகச் செய்து சாப்பிடுவதால் மட்டுமே, நாம் வாழும் காலம் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே, மசாலா வாசமும், சுள்ளென்ற காரமும்தான் நினைவில் வரும். ஆனால், செட்டிநாடு உணவுகளில் உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவுகள் நிறைய இருக்கின்றன.

health,coriander,salt,onion,spinach ,ஆரோக்கியம், கொத்தமல்லி, உப்பு, வெங்காயம், வல்லாரைக்கீரை

சில ஆரோக்கிய உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

கேழ்வரகு இட்லி: செய்முறை: கேழ்வரகு, அரிசி, உளுந்து மூன்றையும் எட்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும். இதில் உப்பு சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும்.


குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் நல்லது. இதில் கால்சியம் சத்து அதிகம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.


சோளம் தினை தக்காளி தோசை: செய்முறை: சோளம், தினை தலா ஒரு கப் எடுத்து, சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தோசைமாவுடன் கலந்து, எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். இதனுடன் நான்கு தக்காளியைப் பொடியாக நறுக்கி தேவையான அளவு சேர்த்து, தோசையாக ஊற்றி வார்க்கவும்.

சோளம், தினையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம். ரத்தசோகையைத் தடுக்கும்.


வல்லாரை தோசை: செய்முறை: ஒரு கப் அரிசி, தினை மற்றும் உளுந்து கால் கப் எடுத்து நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் வல்லாரைக் கீரையை நன்றாகக் கழுவி, நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல் காய்ந்ததும் ஊற்றி தோசையாக வார்க்கவும்.


குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. வல்லாரைக்கீரை நல்ல ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

Tags :
|
|
|