Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மாம்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடைபெறுமா ! சாப்பிட்டு நலம் பெறுங்கள்

மாம்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடைபெறுமா ! சாப்பிட்டு நலம் பெறுங்கள்

By: vaithegi Sun, 28 Aug 2022 8:31:51 PM

மாம்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடைபெறுமா !  சாப்பிட்டு  நலம்  பெறுங்கள்

கோடை காலம் தொடங்கியதில் இருந்து அதை சமாளிக்க சில முக்கிய விஷயங்களை செய்து வருவோம். குறிப்பாக நமது உணவு பழக்கம் முதல் தினசரி நடவடிக்கைகள் வரை மாற்றி கொள்வோம். அந்த வகையில் வெயில் காலங்களில் பலரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருட்களில் ஒன்று மாம்பழம். தர்பூசணி பழத்தை போன்றே பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டது.
மேலும் மாம்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. மாம்பழத்தை வெயில் காலங்களில் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். ஃபோலேட், பீட்டா கெரட்டின், இரும்பு, வைட்டமின்கள் ஏ, வைட்டமின்கள் சி, கால்சியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கிய மூலப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளது. வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் மேலும் பல பலன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

mango,digestion ,மாம்பழம்,செரிமானம்

அதே சமயம் மாம்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடைபெறும். இதில் அமிலேஸ் எனப்படும் செரிமான நொதிகளை கொண்டுள்ளது. பெரிய உணவு மூலக்கூறுகள் செரிமான நொதிகளால் உடைக்கப்படுகின்றன, இதனால் அவை உங்கள் உடலால் எளிதில் ஜீரணிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.ஒரு கப் மாம்பழத்தில் சுமார் 10% வைட்டமின் ஏ உள்ளது. மேலும் இதில் அதிக வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திற்கு இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தாமிரம், ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் மாம்பழத்தில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும்

இது மட்டுமில்லாமல் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.மாம்பழங்களில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. இவை இரண்டும் சரும ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. மாம்பழங்களை சாப்பிடுவதால் முகத்தில் உள்ள அடைபட்ட துளைகள் நீங்கும். மேலும் இது தோலில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உதவுகிறது. மாம்பழம் சாப்பிடுவதால் வயதான செயல்முறையை மெதுவாக்க செய்கிறது.எனவே உண்டு நலன் பெறுவோம்.




Tags :
|