Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஐம்பது வயதை கடந்வர் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது..

ஐம்பது வயதை கடந்வர் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது..

By: Monisha Fri, 08 July 2022 6:55:42 PM

ஐம்பது வயதை கடந்வர் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது..

மனிதர்கள் அனைவரும் தினசரி உணவில் ஏதேனும் ஒரு பழத்தை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக பெர்ரி வகை பழங்களில் அதிக நார்ச்சத்தும், குறைந்தளவு சர்க்கரையும் உள்ளது. அந்த வகையில் ராஸ்பெர்ரியில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் மூலக்கூறுகள் உள்ளது, மேலும் இது ஜீரண சக்திக்கும் உதவுகிறது.

fruits,health,good,daily ,பழம், ஆரோக்கியம்,உணவு,ஊட்டச்சத்து,

பச்சை ஆப்பிள் வயதானவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தவும், உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கவும் பயன்படுகிறது. வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழங்கள் அனைத்து வயதினருக்கும் ஏற்றது, இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்திற்கும் நன்மையளிக்கிறது.

தர்பூசணி பழங்களில் அதிக நீர்சத்து நிரம்பியுள்ளது, இது உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு, சருமத்தையும் நன்கு ஹைட்ரேட்டாக வைத்திருக்கிறது.வயதானவர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து வயதினரும் உட்கொண்டால் அது மிகவும் உடலுக்கு நல்லது.

Tags :
|
|
|