Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எங்கு பார்த்தாலும் காய்ச்சல், ஜலதோஷம், இருமல்.. சாதாரண பாதிப்பா, கொரோனாவா?

எங்கு பார்த்தாலும் காய்ச்சல், ஜலதோஷம், இருமல்.. சாதாரண பாதிப்பா, கொரோனாவா?

By: Monisha Mon, 11 July 2022 7:40:38 PM

எங்கு பார்த்தாலும் காய்ச்சல், ஜலதோஷம், இருமல்.. சாதாரண பாதிப்பா, கொரோனாவா?

எங்கு பார்த்தாலும் காய்ச்சல், ஜலதோஷம், இருமல். சாதாரண பாதிப்பா, கொரோனாவா? பதில் சொல்கிறார். சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.

நீங்கள் சொல்வதுபோல பல வீடுகளிலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளோடு பலரும் இருக்கிறார்கள். ஒருவருக்கு வந்தால் மொத்தக் குடும்பத்தாருக்கும் பாதிக்கிறது. ஆனால், அது தீவிரமாகாமல் சரியாகிவிடுகிறது.அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதிப்பின்றி குணமாகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

corona,fever,cold,cough , காய்ச்சல், ஜலதோஷம், இருமல்,கொரோனா,

இதையெல்லாம் மீறி ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர், இணைநோயாளி என ரிஸ்க் பிரிவில் உள்ளோர் இருப்பார்கள். அவர்களுக்கு நோயைப் பரப்பாமல், பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

எல்லாக் காய்ச்சலும் ஜலதோஷமும் சாதாரணமானவைதான் என நீங்களாக நினைத்துக்கொண்டு, அலட்சியமாக இருப்பதும் தவறு. மருத்துவர்களாகிய எங்களை அணுகினால் அவர் அரசு விதிகளின்படி, அறிகுறிகளுடன் வருவோரை நிச்சயம் டெஸ்ட் செய்யவே சொல்வோம்.

ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் சிறிதுகூட அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து, தொற்று உறுதியானால் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

Tags :
|
|
|