Advertisement

உடல் சூடு குறைய வெந்தயம் பெரிதும் உதவுகிறது

By: Nagaraj Sun, 11 June 2023 9:54:06 PM

உடல் சூடு குறைய வெந்தயம் பெரிதும் உதவுகிறது

சென்னை: அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீருடன்விழுங்கினால் உடல் சூடு குறையும்.

வெங்காயத்தை நன்கு அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் இவை இரண்டையும் உலர்த்தி நன்றாக அரைத்து பொடியாக்கி தினமும் காலையில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். அடிக்கடி உடல் சூடு உண்டானால் இதை முயற்சிக்கலாம்.

ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதை சூடு செய்யவேண்டும். எண்ணெய் சிறிது சூடான உடன் அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகைபோட்டு சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு எண்ணெயை ஆறவைத்து வலது மற்றும்இடது காலின் பெருவிரல் நகத்தின் மேல் மட்டும் இந்த எண்ணெயை தடவ வேண்டும். சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து எண்ணெயை கழுவி விடவேண்டும்.

body heat,irritation of soles,fenugreek,cure ,உடல் உஷ்ணம், உள்ளங்கால் எரிச்சல், வெந்தயம், குணமாகும்

இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் உடல் சூடு குறையும். இதன்மூலம் மனஅழுத்தமும் குறையும். ஆகையால் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள்இதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முயற்சிக்கலாம்.

பாலும் தேனும் உடல் சூட்டை குறைக்கும். தினமும் பாலில் சர்க்கரைக்கு பதிலாகதேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். சுத்தமான தேனை கண்டறிந்து கலந்து குடிப்பது அவசியம். சிலருக்கு அதிகப்படியான உடல் சூடால் பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.

இதனை குறைக்க இரவில் விளக்கெண்ணெயை பாதத்தில் தடவி சூடான நீரில் பாதம்முழுவதும் நனையும்படி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கவேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.

Tags :