Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் அகத்திக்கீரை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் அகத்திக்கீரை

By: Nagaraj Sun, 21 Aug 2022 11:13:15 AM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் அகத்திக்கீரை

சென்னை: ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அகத்திக் கீரையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உடல்சூட்டைத் தணிப்பதில் தனிச்சிறப்பு இக்கீரைக்கு உண்டு. அகத்திக்கீரைத் தைலத்தில் குளித்து வந்தால், பித்தம் தணிந்து மயக்கம், எரிச்சல், புகைச்சல் குணமாகும். அகத்திக் கீரையை தேங்காய், மிளகு சேர்த்து சமைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

digestive power,anthocyanin,bile,milk,flatulence,palliative ,ஜீரண சக்தி, அகத்திக்கீரை, பித்தம், பால், வாயுத் தொல்லை, தணிக்கும்

இக்கீரையை அரைத்து பற்றுப் போட அடிபட்ட வீக்கங்கள் குணமாகும். இதன் சாற்றை நெற்றியில் தடவி ஆவி பிடிக்க தலைவலி நீங்கும். தொண்டை ரணம், தொண்டை வலி இவற்றுக்கு இக்கீரையை பச்சையாக மென்று சாற்றினை உள்ளே விழுங்க குணமாகும்.

பால் கொடுக்கும் தாய்மார்கள் இக்கீரையைச் சாப்பிட பால் நன்கு சுரக்கும். மூளை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த கீரையினை சாப்பிட வேண்டும். அடிக்கடி சாப்பிட்டால் வாய்வு உண்டாகும். வாயுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக இக்கீரையை உண்ணக் கூடாது. பால் அருந்துவதால் உண்டாகும் நன்மை இக்கீரையை உண்பதால் உண்டாகும். ஜீரண சக்தியைப் பெருக்கும். பித்தத்தைத் தணிக்கும்!

Tags :
|
|