Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கியத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகள்

ஆரோக்கியத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகள்

By: Nagaraj Thu, 15 Sept 2022 10:48:05 PM

ஆரோக்கியத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகள்

சென்னை: சுகாதாரமான முறையில் வாழ்வது, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் வழிகள். இருப்பினும் நாம் உண்ணும் உணவுகளும் நமக்கு ஆரோக்கியத்தை அளிப்பதாக இருக்க வேண்டும்.

நம்முடைய உடலுக்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். பாலீஷ் செய்யப்படாத முழுதானியங்கள், பருப்பு வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள், கோஸ் போன்ற இலை காய்களில் இது அதிகம் உள்ளது. வைட்டமின் பி6, பி12-ல் தானியங்கள், பயறுவகைகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகள், சோயா பால், பால் பொருட்கள், மீன், இறைச்சி, முட்டையில் இவை கிடைக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக செயல்பட இரும்புச்சத்து அவசியம். உலர் பழங்கள், பசலைக் கீரை, ஆப்பிள், வாழைப்பழம், பருப்பு வகைகள் ஆகியவற்றில் இரும்புச் சத்து மிகுந்துள்ளது. ஜிங்க் உள்ள மீன், கடல் உணவுகள், இறைச்சி, பூசணி விதை, முந்திரி கொட்டைகள், தயிர், காளான், பிரக்கோலி போன்றவற்றில் உள்ளது.

eggs,fish,dairy products,sun,vitamin d ,
முட்டை, மீன், பால் பொருட்கள், வெயில், வைட்டமின் டி

ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ள மஞ்சள், மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, க்ரீன் டீ சேர்த்துக் கொள்வது அவசியம். நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி. இது ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, கிவி, நெல்லிக்காய், காலிஃபிளவர், தக்காளி, குடைமிளகாய், புதினா இவற்றிலிருந்து கிடைக்கிறது. வைட்டமின் ஈ தாவர எண்ணெய்கள், பச்சை இலைக் காய்கறிகள், பாதாம் போன்ற கொட்டை வகைகளில் உள்ளது.


முட்டை, மீன், பால் பொருட்கள் சாப்பிடுவதாலும், சிறிது நேரம் வெயிலில் நிற்பதாலும் நம் உடலின் வைட்டமின் டி அளவை அதிகரிக்கலாம்.

Tags :
|
|
|