Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள்

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள்

By: Karunakaran Sun, 11 Oct 2020 3:09:19 PM

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள்

வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை ஒருசில உணவு பொருட்களை உட்கொண்டே குறைக்கலாம். பாதாம் பருப்பில் அளவுக்கு அதிகமாக மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு ஏற்படும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக்கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது சற்று ரிலாக்ஸ் ஆக இருப்ப தோடு, சற்று புத்துணர்ச்சியோடும் இருக்கும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும். மனச்சோர்வோடு இருப்பவர்கள் பால் அல்லது பால் பொருளான தயிரை உணவில் அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

foods,depression,work,home ,உணவுகள், மனச்சோர்வு, வேலை, வீடு

சிக்கனில் அதிகமாக புரோட்டீன், உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட் இருப்பதால், இது மனதை அமைதிப்படுத்தி, ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. உடல் எடை குறைய வேண்டுமென்று கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டாம். கார்போஹைட்ரேட் உள்ள உணவு எடையை அதிகரிக்கும் தான், ஆனால் அதே சமயம் கொஞ்சம் கூட சேர்க்காமல் இருக்க கூடாது. இதனால் மனச்சோர்வு தான் ஏற்படும்.

மனச்சோர்வு குறைய சாக்லேட் கூட ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டிடிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும் போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்ட மின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

Tags :
|
|