Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முகத்தை மென்மையாக மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்

முகத்தை மென்மையாக மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்

By: Nagaraj Sun, 13 Aug 2023 6:45:30 PM

முகத்தை மென்மையாக மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்

சென்னை: முகத்துக்கு நம் கைகளைக் கொண்டே மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அழகும் பெறும். நிதானமாக முடிந்தால் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்க மன அழுத்தம் குறைந்து மன அமைதியுடன், முகமும் பொலிவு பெறும்.

பப்பாளி சிறிது அரைத்து அல்லது தக்காளிக் கூழை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவ பளிச்சென எண்ணெய் பிசுபிசுப்பு இன்றி இருக்கும்.

facial,massage,oil bath,wellness, ,ஆரோக்கியம், எண்ணை குளியல், மசாஜ், முகம்

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் உண்ணும் உணவே ஆரோக்கியம் மற்றும் நம் சரும அழகைப் பாதுகாக்கும். எனவே, சத்தான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

தலைமுடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்பூவை தவிர்த்து எண்ணைக் குளியல் – சீயக்காய் + மூலிகைப் பொடியுடன் தேய்க்க கூந்தல் அழகுடன் ஆரோக்கியமும் பெறும்.

பனிக்காலத்தில் சோப்பை தவிர்த்து பாசிப்பருப்பு ஒரு கப், பச்சரிசி கால் கப், சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பொடித்து அல்லது மிஷினில் அரைத்து, குளிக்கும் போது சோப்புக்கு பதில் உபயோகிக்க சருமத்தில் வெடிப்பு வராமல் பளபளப்புடன் இருக்கும்.

Tags :
|