Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!

நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!

By: Nagaraj Tue, 11 Oct 2022 10:50:51 AM

நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!

சென்னை: உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க நல்ல உறக்கம் இன்றியமையாதது. நல்ல உறக்கம் என்பது இரவில் 7 முதல் 9 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்குவது தான். இதற்கு உதவும் சிறந்த உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பாதாம்: ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் மற்றும் மெக்னீசியம் பாதாமில் இருப்பதால், தூங்கும் முன் சாப்பிட இது சிறந்தது

வான்கோழி: புரதம் மற்றும் டிரிப்டோபான் அதிகம் இருப்பதால் வான்கோழி உடலுக்கு சோர்வைத் ஏற்படுத்தி, நிம்மதியான உறக்கத்திற்கு உதவும்.

சாமந்தி டீ: சாமந்தி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

better sleep,foods,health,walnut,fish,night ,
சிறந்த தூக்கம், உணவுகள், ஆரோக்கியம், வால்நட், மீன், இரவு

கிவி: கிவியில் செரோடோனின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதுவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
செர்ரி: மெலடோனின் என்ற ஹார்மோன் செர்ரி சாறில் இருப்பதால், நல்ல இரவு தூக்கத்தை தூண்ட இது உதவும்.

மீன்: வைட்டமின் டி மற்றும் ஒமேகா -3 மீன்களில் இருப்பதால், இதை தூங்கும் முன் சாப்பிட்டால், தூக்கத்தின் தரம் மேம்படும்.

வால்நட்: மெலடோனின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், வால்நட் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும்.

Tags :
|
|
|
|