Advertisement

ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நெல்லிக்காய்!!

By: Monisha Tue, 02 June 2020 11:56:59 AM

ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நெல்லிக்காய்!!

உணவில் நெல்லிக்காயைச் சேர்ப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். நெல்லிக்காயை பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். நீங்கள் இதை பச்சையாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிடலாம்.

நெல்லிக் கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.

மோசமான கொழுப்பின் அளவு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கும். கொழுப்பின் அளவை பராமரிக்க நெல்லிக்காய் உதவும்.

health benefits,gooseberry,weight loss,heart health ,ஆரோக்கிய நன்மை,நெல்லிக்காய்,எடை இழப்பு,இதய ஆரோக்கியம்

எடை இழப்புக்கு நெல்லிக்காய் உதவக்கூடும், ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது செரிமானத்தையும் அதிகரிக்கிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடல் அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.

வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் வலிமையடைகிறது.

Tags :