Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் வராமல் தடுக்கும் நெல்லிக்காய்

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் வராமல் தடுக்கும் நெல்லிக்காய்

By: Nagaraj Sat, 19 Nov 2022 1:00:32 PM

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் வராமல் தடுக்கும் நெல்லிக்காய்

சென்னை: குளிர்காலத்தில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது உங்களை ஆரோக்கியத்தை சீராக வைத்து இருக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். எனவே தைரியமாக நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் அண்டாமல் தடுக்கிறது.

குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் பிரச்சனைகள் ஏற்படுத்து வழக்கம். கடுமையான குளிர் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், கல்லீரல் பாதிப்பைத் தடுக்கவும் துணை புரிகிறது.

நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் அண்டாமல் தடுக்கிறது. மேலும் நுரையீரல் பிரச்னைகளை சீராக்கி சுவாச பாதை சீராக இயங்க உதவுகிறது.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால் வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம் உள்ளது. அதாவது ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

gooseberry,seasonal,winter,healthy,immunity ,நெல்லிக்காய், பருவம், குளிர்காலம், ஆரோக்கியமானது, நோய் எதிர்ப்பு சக்தி

நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் அண்டாமல் தடுக்கிறது. மேலும் நுரையீரல் பிரச்னைகளை சீராக்கி சுவாச பாதை சீராக இயங்க உதவுகிறது.

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால் வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம் உள்ளது. அதாவது ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது

நெல்லிக்காயை மிட்டாய், புட்டிகளில் அடைத்த சாறாக பயன்படுத்துவதை விட பிரஷ்ஷான ஜூஸ்ஸாக சாப்பிடுவது மிகவும் நல்லது. கடைகளில் வாங்கி குடிக்கும் ஜூஸ்களை விட நாம் வீட்டிலேயே செய்வது பாதுகாப்பானது.


பழங்கள் இயற்கையானவை என்பதால் இதில் எந்தவொரு பதப்படுத்தும் கெமிக்கல், நிறங்கள் எதுவும் இல்லை என்பதால் ஆரோக்கியமானது. மேலும், குளிர்காலம் என்பது நெல்லிக்காய் அறுவடை செய்யப்படும் பருவம் என்பதால் தற்போது அதனை பயன்படுத்தி கொள்வது அவசியமாகும்.

Tags :
|