Advertisement

அளவற்ற நன்மைகளை அள்ளித்தரும் திராட்சை ரசம்!

By: Monisha Mon, 23 Nov 2020 12:30:12 PM

அளவற்ற நன்மைகளை அள்ளித்தரும் திராட்சை ரசம்!

கிரேக்கத்தில் கிரேப் ஜூஸை 'கடவுளின் பானம்' என்று அழைக்கின்றனர். இந்த கிரேப் ஜூஸ் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவதாக அமைந்துள்ளது. இந்த பதிவில் திராட்சை ரசத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

திராட்சை ரசமானது இரத்த ஓட்டத்தை துரிதமாக்கும். மேலும், இரத்தம் ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும். ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் காணப்படும். நார்சத்து அதிகமுள்ள இந்த கிரேப் ஜூசை டயட்டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக்காய்கறிகளை உண்பதற்குச் சமம். கிரேப் ஜூஸில் ரெஸ்வெராட்ரால் எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

grape juice,health,vitamins,cancer,resveratrol ,திராட்சை ரசம்,ஆரோக்கியம்,வைட்டமின்,கேன்சர்,ரெஸ்வெராட்ரால்

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் கட்டுப்படுத்துவதால், மார்பக புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது. திராட்சைப் பழரசத்தை சோடா மற்றும் கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம் தரும்.

தினமும் மதிய உணவுக்குப் பின் 250 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக அதாவது சருமத்திற்கு இளமை தரும் பொருளாக காணப்படுகிறது.

திராட்சையில் வைட்டமின் சி, இ, ஏ, பீட்டா கரோட்டின் போன்றவை காணப்படுவதால், இது மூளையை சுறுசுறுப்பாக ஆக்குவதோடு, அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது.

grape juice,health,vitamins,cancer,resveratrol ,திராட்சை ரசம்,ஆரோக்கியம்,வைட்டமின்,கேன்சர்,ரெஸ்வெராட்ரால்

திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சைச்சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாதவிலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சைச்சாறு தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. இது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச்சென்ற வெண்மையை தருகிறது.

Tags :
|
|