Advertisement

கால்சியம், அயோடின் சத்துக்கள் நிறைந்த திராட்சை

By: Nagaraj Wed, 27 July 2022 10:35:08 PM

கால்சியம், அயோடின் சத்துக்கள் நிறைந்த திராட்சை

சென்னை: திராட்சை ஜூஸில் வைட்டமின்களை தவிர காப்பர், கால்சியம், அயோடின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம், அதிகம் உள்ளது.

இதயநோய், உடல் வறட்சி, ஆர்த்ரிட்டிஸ், வாத நோய், கல்லீரல், பிரச்சனைகள் மற்றும் அழற்சியை குணமாக்கும். திராட்சை ஜூஸ் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியபங்கு வகிக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை குணமாக்குகிறது. பசி எடுக்காதவர்கள் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டுவர பசியின்மையை போக்கும். திராட்சைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கிறது.

grapes,body weight,anemia,cholesterol ,திராட்சை, உடல் எடை, இரத்த சோகை, கொழுப்பு

திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சுருக்கங்கள் மறையும். சருமம் பொலிவு பெறும். உடலில் உள்ள அதீத பித்தத்தை நீக்கும். உடல் வறட்சியை நீக்கி உடலுக்கு ஊட்டமளிக்கும். நரம்புகள், கல்லீரல், மூளை இதயம் போன்ற உறுப்புகளை வலுவாக்குகிறது.

நீர்க்கடுப்பு, சிறுநீர் சொட்டு சொட்டாக பிரிதல் போன்றவை உடனே குணமாக்கும். இரத்த சோகையை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும். உடல் எடையை சரியான அளவில் வைத்திருக்க உதவும்.

Tags :
|
|