Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கிரீன் காபி பெஸ்டா... பிளாக் காபி பெஸ்டா; ஆய்வில் வெளியான தகவல்

கிரீன் காபி பெஸ்டா... பிளாக் காபி பெஸ்டா; ஆய்வில் வெளியான தகவல்

By: Nagaraj Thu, 06 Oct 2022 11:20:05 AM

கிரீன் காபி பெஸ்டா... பிளாக் காபி பெஸ்டா; ஆய்வில் வெளியான தகவல்

சென்னை: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பால் சேர்த்து காபி குடிப்பதைத் தவிர்த்து விட்டு, பிளாக் காபி குடிக்கப் பழகினால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.


இதில் க்ரீன் காபி கொட்டைகள் அதாவது பச்சை காபி கொட்டைகள் என்பது வறுக்காத காபி கொட்டைகள் என வகைப்படுத்தலாம். இதில் வறுத்த காபி கொட்டைகள் பிளாக் காபி கொட்டைகள் என அறியப்படுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பால் சேர்த்து காபி குடிப்பதைத் தவிர்த்து விட்டு, பிளாக் காபி குடிக்கப் பழகினால் அனைவரையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதேபோல் உடலில் ‌எடையையும் குறைக்கும்.

காபி கொட்டைகளை வறுப்பதால் அதில் இருக்கும் க்லோரோஜெனிக் என்னும் மூலக்கூறு குறைந்து விடுவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. பச்சைக் காபியில் இருக்கும் உயர் க்லோரோஜெனிக் அமிலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக கூறப்படுகிறது.

green coffee,hunger,weight,lovers,eating ,கிரீன் காபி, பசி, உடல் எடை, விரும்புவோர், உணவு சாப்பிடுவது

பொதுவாக பயன்படுத்தும் வறுத்த கொட்டைகளைக் கொண்டுத் தயாரிக்கும் காபியில் இந்த க்லோரோஜெனிக் அமிலம், பச்சைக் காபியை விட குறைந்த அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. பச்சை காபி பருகுவதால், அதில் இருக்கும் க்லோரோஜெனிக் அமிலத்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இதயத்திற்கு நன்மை கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பச்சை காபி கொட்டைகள் வறுத்து பதப்படுத்தப்படாதவை என்பதால் இதில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

இந்த கிரீன் காபி அருந்துவதால் கல்லீரல் சுத்திகரிக்கப்பட்டு, இயற்கை முறையில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அதேபோல் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகளும் வெளியேற்றப்படுகின்றன. கிரீன் காபி அருந்துவதால் இரத்த அழுத்தம் குறைந்து மேலும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. அதேபோல் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது.


உங்கள் எடையைக் குறைக்க விரும்புவோர், அடிக்கடி ஏற்படும் பசியை போக்க விரும்புவோர் பச்சை காபியை பருகுவதால், பசி குறைந்து அதிக உணவு சாப்பிடுவதை தடை செய்யும். இதனால் பச்சை காபி சாப்பிடுவதால் எடை கணிசமான அளவு குறைகிறது என சொல்லப்படுகிறது. பச்சை காபியில் உள்ள கொலோரோஜெனிக் அமிலம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Tags :
|
|
|