Advertisement

உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் கிரீன் டீ!!

By: Monisha Tue, 01 Sept 2020 3:41:24 PM

உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் கிரீன் டீ!!

கிரீன் டீயில் பல்வேறு நன்மைகள் கொண்ட ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலானோர் கிரீன் டீயை பயன்படுத்துகிறார்கள்.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும், இதய நோயை கட்டுப்படுத்தும், வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தும், உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் என கிரீன் டீயின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தினமும் காலை மற்றும் மாலை கிரீன் டீ குடித்து வருபவர்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

green tea,health,cancer,antioxidant,teeth ,கிரீன் டீ,ஆரோக்கியம்,புற்றுநோய்,ஆன்டிஆக்ஸிடண்ட்,பற்கள்

கிரீன் டீ குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் வெளியேறும். மேலும் இது உங்கள் உடலில் பல இடங்களில் தேங்கும் கொழுப்பினை தடுக்கும். முக்கியமாக உங்கள் இருதய இரத்த குழாயில் தேங்கும் கொழுப்பினை கரைக்க உதவும்.

கிரீன் டீயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளதால் இவை உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. தினமும் இரண்டு க்ரீன் டீயினை குடித்து வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படாது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

கிரீன் டீக்கு உங்களின் வாய் துற்நாற்றத்தினை போக்கும் சக்தி உள்ளது. தினமும் க்ரீன் டி குடித்து வந்தால் உங்களின் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியமாக இருக்கும்.

Tags :
|
|