Advertisement

உடல் எடையைக் குறைக்க உதவும் கொய்யாப்பழம்!

By: Monisha Sun, 16 Aug 2020 4:41:13 PM

உடல் எடையைக் குறைக்க உதவும் கொய்யாப்பழம்!

கொய்யாப்பழத்தில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளை பெறலாம்.

கொய்யா நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தினமும் 2 கொய்யா பழங்கள் சாப்பிட்டு வந்தால், அது நம் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. விட்டமின் C சத்துக்களை, கொய்யா பழம் அதிகமாக கொண்டுள்ளதால், விட்டமின் C மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த கொய்யா பழத்தினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

weight loss,guava,immunity,calcium,iron ,உடல் எடை,கொய்யாப்பழம்,நோய் எதிர்ப்பு சக்தி,கால்சியம், இரும்புச்சத்து

கொய்யா பழத்தில் உள்ள விட்டமின் A, சளித்தொல்லை மற்றும் குடல் தொடர்புடைய குறைகளை சரிசெய்து, பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது. கொய்யா பழம் சாப்பிடுவதால், அது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, வெட்டிச் சாப்பிடுவதை விட கடித்துச் சாப்பிடுவதால், அதனுடைய முழுமையான பலனை பெறலாம்.

Tags :
|