Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தலைவலியா... காய்ச்சலா... வீட்டிலேயே டாக்டர் இருக்காருங்க...!

தலைவலியா... காய்ச்சலா... வீட்டிலேயே டாக்டர் இருக்காருங்க...!

By: Nagaraj Fri, 10 Nov 2023 11:13:58 PM

தலைவலியா... காய்ச்சலா... வீட்டிலேயே டாக்டர் இருக்காருங்க...!

சென்னை: இந்த காலத்தில் தலைவலியாக இருந்தாலும் சரி, வயிற்று வலியாக இருந்தாலும் சரி உடனே மெடிக்கல் போய் மாத்திரை வாங்கி சாப்பிடறதே பழக்கமாக போயிடுச்சு. ஆனால் அது நிரந்தர தீர்வாக இருக்குமா? நோய் உடலை விட்டு போய்விடுமா? இனி வேண்டாங்க... மாத்திரை... நம்ம பாட்டி வைத்தியம் இருக்கே கைவசம்...

சுக்கு, மிளகு, திப்பிலி: இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு குடித்தால் போதும். உடனே குணம் கிடைக்கும். உடலும் புத்துணர்ச்சி பெறும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வந்தால் நோய்கள் உங்க பக்கம் வரவே அஞ்சும்.

இஞ்சி: தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படவே ஏற்படாது. வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

medicinal,basil leaves,honey,ginger,nervousness,memory ,மருத்துவம், துளசி இலை, தேன், இஞ்சி, நரம்புக்கோளாறு, ஞாபகச்சக்தி

புளி: சாம்பாரிலும், ரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி, டார்டாரிக் அமிலம், கால்சியம் போன்றவை உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு, புளி சேர்த்த ரசம் தவறாமல் ஒரு டம்ளராவது குடித்து பாருங்க...

துளசி: துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி கலந்து ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் நலம் பயக்கும்.

சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

Tags :
|
|