Advertisement

பல்வேறு நன்மைகளை உடலுக்கு தரும் கடுகு எண்ணெய்!!

By: Monisha Mon, 08 June 2020 2:43:09 PM

பல்வேறு நன்மைகளை உடலுக்கு தரும் கடுகு எண்ணெய்!!

கடுகு எண்ணெயில் HDL என்ற நல்ல கொலெஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இந்த எண்ணெய்யில் ஒமேகா 3 மற்றும் ஃப்பேட்டி அசிட் அதிகமாக இருக்கிறது. மற்ற எண்ணெய்யை விட கடுகு எண்ணெய் மிகவும் சிறந்தது.

கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் தலை முடி நன்றாக வளரும். கடுகு எண்ணெய்யை உடலில் மசாஜ் செய்து வந்தால் உடலில் தேவையில்லாத டாக்சின்ஸ் வியர்வையில் வெளியேறிவிடும்.

health benefits,mustard oil benefits,mustard oil health benefits,health tips ,ஆரோக்கியம்,கடுகு எண்ணெய்,நல்ல கொலெஸ்ட்ரால்,ஒமேகா 3,தோல் பிரச்சனை

கடுகு எண்ணெய்யை கைகளில் அரிப்பு, புண்கள், தேமல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கடுகு எண்ணெயை தேய்த்து வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது.

பற்களில் ஏற்படும் இரத்த சிதைவு பிரச்சனையை சரியாக்க 1 ஸ்பூன் தூள் உப்பு, கடுகு எண்ணெய் 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து மிக்ஸ் செய்து தினமும் காலையில் பல் தேய்த்த பிறகு இந்த கலவையை பற்களில் தடவி வந்தால் பற்களில் உள்ள ஈறு பிரச்சனைகள் சரியாகிவிடும்.

வெந்தயத்தை பொடி செய்து கடுகு எண்ணெயுடன் பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து உங்கள் முடிகளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்துகொள்ளலாம்.

Tags :