Advertisement

கருஞ்சீரகத்தின் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

By: Nagaraj Fri, 23 Sept 2022 10:20:15 PM

கருஞ்சீரகத்தின் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

சென்னை: கருஞ்சீரகத்தின் அற்புத குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. இது உங்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒன்றாகும்.

தெற்கு ஐரோப்பா, தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் வளரும் நிஜெல்லா சாடிவா தாவரத்தின் விதைகளின் பொதுவான பெயர் தான் கருஞ்சீரகம். இது நிஜெல்லா, கருப்பு சீரகம், பெருஞ்சீரகம், கருப்பு கருவேப்பிலை மற்றும் ரோமன் கொத்தமல்லி என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. உலக மக்கள் அனைவரும் மருத்துவத்திற்காக இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி வைத்தியத்தில் காய்ச்சலுக்காக செய்யும் கசாயத்தில் கருஞ்சீரகம் முக்கியமான ஒன்றாகும். இதன் மணமும் சுவையும் மிகவும் தனித்துவமாக இருக்கும்.

fenugreek,benefits,joint pain,mustard oil,diabetes ,கருஞ்சீரகம், நன்மை, மூட்டு வலி, கடுகு எண்ணெய், நீரிழிவு நோய்

கருஞ்சீரகம் பொதுவாக ஆஸ்துமா , நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் , எடை இழப்பு மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

கருஞ்சீரக எண்ணெயுடன் சாத்துக்குடி சாரை சேர்த்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைந்து விடும். தினமும் காலையில் பிளாக் டீயுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து குடித்தால் நீரிழிவு நோய் குறைவதை பார்க்க முடியும்.

ஒரு கைப்பிடி கருஞ்சீரக விதைகளை எடுத்து , கடுகு எண்ணெயுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதை இறக்கி கை பொறுக்கும் அளவில் ஆறியதும், மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் நல்ல முன்னேற்றம் தெரியும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் , அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிக்கலாம்.

Tags :