Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் இருமுறை அவரைக்காய்..!

உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் இருமுறை அவரைக்காய்..!

By: Monisha Fri, 12 June 2020 3:03:45 PM

உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் இருமுறை அவரைக்காய்..!

நாம் உண்ணும் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவரைக்காய் உண்பது நல்லது.

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும்.

அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. அவரைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால், உணவில் அடிக்கடி இதை சேர்த்து கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.

health,broadbeans,immunity,fat,fiber ,ஆரோக்கியம்,அவரைக்காய்,நோய் எதிர்ப்பு சக்தி,கொழுப்பு,நார்ச்சத்து

அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

Tags :
|
|