Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? கேரட் ஜூஸ் குடிக்கலாம்!

புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? கேரட் ஜூஸ் குடிக்கலாம்!

By: Monisha Thu, 03 Dec 2020 08:52:57 AM

புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? கேரட் ஜூஸ் குடிக்கலாம்!

நம் ஊரில் கிடைக்கும் பல காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடலாம். அந்த வகையில் நிறத்தை பார்த்ததும் சாப்பிட தூண்டும் காய்கறி வகையில் ஒன்று தான் கேரட். இந்த கேரட்டில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் கரோட்டீனாய்டு நிறைந்துள்ளது.

கரோட்டீனாய்டு நிறைந்த உணவுப் பொருளை அதிகம் எடுத்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமல்லாமல் இது இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்க உதவும்.

மேலும் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கும். கேரட்டில் வைட்டமின் எ அதிகமாக இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தும். இப்படி பல நன்மைகளை வாரி வழங்கும் கேரட்டை ஜூஸ் செய்தும் பருகலாம்.

cancer,carrot juice,fiber,nutrition,health ,புற்றுநோய்,கேரட் ஜூஸ்,நார்ச்சத்து,ஊட்டச்சத்து,ஆரோக்கியம்

தேவையான பொருட்கள்
கேரட் – 3
எலுமிச்சை – 1/2

செய்முறை
முதலில் கேரட்டை நன்கு நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சையை சாறு பிழிந்து ஊற்றி குடியுங்கள்.

கேரட்டை ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் ஆரோக்கியத்தோடு அழகும் அதிகரிக்கும். எனவே வாரம் இரண்டு முறையாவது கேரட்டை ஜூஸ் செய்து குடித்து மகிழுங்கள்.

Tags :
|
|