Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இரும்புச்சத்து அதிகளவில் நிறைந்துள்ள முருங்கைக் கீரையின் பயன்கள்!

இரும்புச்சத்து அதிகளவில் நிறைந்துள்ள முருங்கைக் கீரையின் பயன்கள்!

By: Monisha Mon, 14 Sept 2020 2:52:03 PM

இரும்புச்சத்து அதிகளவில் நிறைந்துள்ள முருங்கைக் கீரையின் பயன்கள்!

கீரை வகைகள் அனைத்துக் காலங்களிலும் சாப்பிட கூடிய ஒரு உணவாகும். ஆனால், கீரைகளை இரவில் சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.

கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.

கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகையை விரட்டும் முருங்கை. முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே. அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை.

iron,vitamins,drumstick leaves,health,fiber ,இரும்புச்சத்து,வைட்டமின்,முருங்கைக் கீரை,ஆரோக்கியம்,நார்ச்சத்து

முருங்கைக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் காணப்படுகிறது.

இரும்புச் சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும். உடல்நலத்தை அதிகரிக்கும்.

ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை, முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.

Tags :
|
|