Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அனைவரும் விரும்பி உண்ணும் உலர் திரட்சையில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

அனைவரும் விரும்பி உண்ணும் உலர் திரட்சையில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

By: Monisha Thu, 18 June 2020 2:47:13 PM

அனைவரும் விரும்பி உண்ணும் உலர் திரட்சையில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

உலர் திரட்சை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பொருளாகும். அதில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளவோம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

dry grapes,health,hemoglobin,calcium,heart disease ,உலர் திரட்சை,ஆரோக்கியம்,ஹீமோகுளோபின்,கால்சியம்,இதய நோய்

குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

Tags :
|