Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வெந்தயக் கீரையில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்!

வெந்தயக் கீரையில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்!

By: Monisha Mon, 15 June 2020 1:05:44 PM

வெந்தயக் கீரையில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்!

வெந்தயத்தை போன்று வெந்தயக் கீரையிலும் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றது. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாகும். வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.

health,fenugreek leaves,digestive power,pelvic pain,mineral salts ,ஆரோக்கியம்,வெந்தயக் கீரை,ஜீரண சக்தி,இடுப்பு வலி,தாது உப்புகள்

இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். இதனால் உடல் சுத்தமாகும். அத்துடன் வெந்தயக் கீரையை உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும் போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேகவைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும்.

Tags :
|