Advertisement

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூக்களின் பயன்கள்

By: Nagaraj Thu, 19 Jan 2023 1:23:05 PM

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூக்களின் பயன்கள்

சென்னை: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூக்கள் பயன்களைப் பார்ப்போம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

முருங்கைப் பூ ; இதை உணவில் சேர்ப்பதால் கண்கள் குளிர்ச்சி அடையும். உடல் உறுப்புகள் சீராக வளர்ச்சி அடையும். அதிகமான பித்தத்தை ப் போக்கி, மூட்டு வலியைக் குறைக்கும். ஆண்மையைப் பெருக்கி , தாய்ப்பால் பெருகவும் துணைபுரிகிறது.

வெங்காயப் பூ ; குடல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. குன்ம நோய்களைப் போக்கும்.

வாழைப் பூ ; வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், இருமல், கை கால் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தருகிறது. பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான பாதிப்புகளைக் குறைக்கிறது. வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்துகிறது.

pulyam poo,neem poo,avaram poo,lack of taste,bile ,புளியம் பூ, வேப்பம்பூ, ஆவாரம் பூ, சுவையின்மை, பித்தம்

அகத்திப் பூ ; உடல் அழற்சியைப் போக்கி வெயிலினால் ஏற்படும் பித்தத்தைக் குறைக்கிறது.

தாமரைப் பூ ; தலை எரிச்சல், தலை சுற்றலை போக்கும். மன உளைச்சலைப் போக்கி மன‌அமைதி தந்து நல்ல தூக்கத்தைத் தரும். இதயத்துக்கு வலுவூட்டி இதயம் நன்கு செயல்பட துணைபுரிகிறது.

வேப்பம் பூ ; தொடர் ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகளை அகற்றும். பித்தத்தை தணிக்கிறது. தலைமுடி சம்பந்தமான பாதிப்புகளைக் குறைக்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளை போக்குகிறது.

ஆவாரம் பூ ; இதை வதக்கி ஒரு மெல்லிய துணியில் வைத்து கட்டி கண்ணை சுற்றி ஒத்தடம் கொடுக்க, கட்டியினால் உண்டாகும் கண்நோய்களைப் போக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். உடல் எடைக் குறைக்க உதவி புரிகிறது. மேனி எழிலைப் பாதுகாத்து பளபளப்பைத் தருகிறது.

புளியம் பூ ; பித்தத்தை நீக்கும். நாவின் சுவையின்மை யைப் போக்கும். இரத்தசுத்திக்கு உதவியாக இருக்கும் .

Tags :