Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • திராட்சை பழத்தில் மட்டுமல்ல திராட்சை விதையிலும் எண்ணற்ற சத்துக்கள்!!

திராட்சை பழத்தில் மட்டுமல்ல திராட்சை விதையிலும் எண்ணற்ற சத்துக்கள்!!

By: Monisha Thu, 18 June 2020 2:47:04 PM

திராட்சை பழத்தில் மட்டுமல்ல திராட்சை விதையிலும் எண்ணற்ற சத்துக்கள்!!

திராட்சை பழத்தை சாப்பிடும் பலர் திராட்சையின் விதைகளை சாப்பிடுவதில்லை ஆனால் திராட்சை விதையிலும் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. ஆனால் அவைகளில் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

திராட்சை விதை உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய மருத்துவத்தில் திராட்சை விதையின் சாறு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் இதயம் மற்றும் இரத்த நாள பிரச்சனைகள், பெருந்தமனி தடிப்பு, உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.

grapefruit,seed,vitamin c,vitamin e,health ,திராட்சை பழம்,விதை,வைட்டமின் சி, வைட்டமின் இ,ஆரோக்கியம்

ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.

சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

Tags :
|