Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் பச்சைமிளகாய்

நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் பச்சைமிளகாய்

By: Monisha Thu, 10 Sept 2020 11:45:53 AM

நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் பச்சைமிளகாய்

நமது உணவில் கார சுவைக்காக சேர்க்கும் பச்சைமிளகாயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. பச்சை மிளகாய் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் பணியை செய்கிறது. பச்சைமிளகாயில் வைட்டமின்கள் A, B, C ஆகியவை உள்ளன. இவை நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து, நோய் தொற்றில் இருந்து நம்மை காக்கின்றன.

பச்சைமிளகாயில் ஜீரணத்தைத் தூண்டும், நார்ச்சத்துக்கள் இருப்பதால், இரைப்பையை சுத்தம் செய்து, மலச்சிக்கலை நீக்குகிறது. நீரழிவுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உணவில், பச்சைமிளகாயை சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

பச்சை மிளகாயில் உள்ள இரும்புச்சத்து, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவி, ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது. இதன் மூலம் ரத்த சோகையில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

immunity,green chilli,health,iron,beta carotene ,நோய் எதிர்ப்புச்சக்தி,பச்சைமிளகாய்,ஆரோக்கியம்,இரும்புச்சத்து,பீட்டா கரோட்டீன்

கண் ஆரோக்கியம் இதில் இடம்பெற்றுள்ள பீட்டா கரோட்டீன் கண்களுக்கு ஆரோக்கியத்தையும் நல்ல பார்வையையும் தருகிறது. பச்சைமிளகாயில் உள்ள சிலிக்கான்கள் தலையில் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

இத்தனை பலன்தரும் பச்சைமிளகாயை அளவுக்கு அதிகமாக உணவில் எடுத்துக்கொண்டால், வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற நோய்கள் வரும் என்பதையும் நாம் அனைவரும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே பச்சைமிளகாயை அளவாக சாப்பிட்டு அதில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பெற்றிடுங்கள்!

Tags :
|
|