Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சாதாரணமான மருதாணி இலையில் இவ்வளவு ...மருத்துவ குணங்களா !

சாதாரணமான மருதாணி இலையில் இவ்வளவு ...மருத்துவ குணங்களா !

By: vaithegi Fri, 26 Aug 2022 7:37:26 PM

சாதாரணமான மருதாணி இலையில் இவ்வளவு ...மருத்துவ குணங்களா !

மருதாணி தாவரத்திற்கு மருதோன்றி, ஜனா இலை, ஐவனம், பவனம் போன்ற பல பெயர்கள் உண்டு.மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்தி, தலையில் தடவி வர இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும்.



மேலும் இந்தியாவிலும் இது ஒரு மூலிகையாக, அழகு சாதனப்பொருளாக பலலாயிரக்கணக்கான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது.இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறு செடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டவை.எனவே 6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.

henna leaf,good,health benefits of heena leaf ,மருதாணி இலை,நன்மை

அதே சமயம் மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும். இளநரை மாறும் – மருதாணி இலையின் மைய நன்றாக அரைத்து அடை போல் தட்டையாகத் தட்டி நிழலில் காய வைத்து கொள்ள வேண்டும். இதை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் நான்றாக வடிகட்டி ஒரு போத்தலில் பத்திரப்படுத்த வேண்டும். இப்படி தயாரித்த எண்ணெயைத் தலையில் பூசி வந்தால் இளநரை நீங்கும். கண்களுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் மற்றும் நல்ல தூக்கத்தை தரும் – இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நல்ல தூக்கத்தையும் தரும்.தலைவலியைக் குணமாக்கும் – மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்டை நெத்தியில் தடவினால் கடுமையான தலைவலியாக இருந்தாலும் குறைந்து விடும்.



மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும் – இதற்கு 6 தேக்கரண்டி மருதாணி இலையில் இருந்து பிழிந்த சாற்றை காலை வேளையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் வரை தொடர்ந்து பருக வந்தாலஒ; நல்ல பலன் கிடைக்கும். நகம் சொத்தை நீக்கி நகம் பளபளப்பாக்க உதவுகின்றது – மருதாணி இலைகளுடன் கொஞ்சம் பாக்கு கலந்து அதை அம்மியில் வைத்து அரைத்து இரவில் கை, கால், நகங்களில் வைத்து நன்றாக காய்ந்த பின்னர் காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொப்புளங்கள், தீக்காயங்கள் போன்றவற்றைக் குணமாக்கச் சிறந்த மருந்தாகச் செயல்படும் – அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்கும். குளிர்ச்சித் தன்மை கொண்ட மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர குணமாகும். குஷ்ட நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுத்தபடுகின்றன.மஞ்சள் காமாலைப் பிரச்சனையைக் குணப்படுத்தும். காசநோயை குணப்படுத்த மருதாணி பெரிதும் உதவுகிறது – காசநோய்க்கு எதிராக மருதாணி இலைகள், பவுடர் மற்றும் பேஸ்ட் செயல்படும்.எனவே இதை பயன் படுத்தி பலன் பெறலாம்.

Tags :
|