Advertisement

மூலிகை பொடிகளின் ஆரோக்கிய நன்மைகள்!

By: Monisha Wed, 07 Oct 2020 4:14:21 PM

மூலிகை பொடிகளின் ஆரோக்கிய நன்மைகள்!

நமது உணவில் பயன்படும் பல பொருட்களை பொடி செய்து உபயோகப்படுத்தினால் அதில் பல நன்மைகள் உள்ளது. இந்த பதிவில் பல பொடிகளும் அதினால் உண்டாகும் ஆரோக்கிய பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

முருங்கைவிதை பொடி - இது சமீப காலமாக அதிக அளவில் பேசப்படுகிறது. இது உடலுக்கு தேவையான இரும்பு சத்து கொடுக்க கூடியது. அது மட்டுமல்லாது ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

வாதநாராயணன் பொடி - வாத நோய்களுக்கான நிவாரணி. அனைத்து விதமான பக்கவாதம், கை, கால் மூட்டு வலிக்கு ஏற்றது.

பாகற்காய் பொடி - உடலில் உள்ள கிருமிகள், புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள இன்சுலின் அளவை சமன் படுத்த கூடியது.

health,herbal,diabetes,rheumatism,kidney problem ,ஆரோக்கியம்,மூலிகை,சர்க்கரை நோய்,வாத நோய்,சிறுநீரக பிரச்சனை

வாழைத்தண்டு பொடி - எல்லா விதமான சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.

சுக்கு பொடி - சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை எனபர்கள். நம் உடலில் உண்டாகும் அஜீரணம், போன்ற பிரச்சனைகளை தீர்த்து செரிமானம் ஒழுங்காக நடைபெறும்.

ஆடாதொடை பொடி - சுவாச கோளாறு, ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஆடாதொடை பொடியினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்.

கருஞ்சீரகப்பொடி - நீரழிவு நோய், குடல் புண் போன்றவை நீங்கும்.

வெட்டி வேர் பொடி - தினமும் நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு படிப்படியாக குறைந்து குளிர்ச்சி தரும். இந்த நீரில் குளித்து வந்தால் வேர்க்குரு, வேர்வை வாடை வராது. நாள் முழுவதும் நல்ல புத்துணர்ச்சி தரும்.

Tags :
|
|