Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

By: Monisha Sat, 27 June 2020 3:16:37 PM

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளது. பலாவில் வைட்டமின் A சத்து அதிகளவில் உள்ளது. இந்த வைட்டமின் உடல் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.

பலாவில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, ரத்ததில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையுடையவை.

தைராய்டு சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம். பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. இப்பழத்தை அதன் சீசன் காலங்களில் சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத் தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது. பலாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சாப்பிடலாம்.

jack fruits,vitamin a,eyesight,vitamin c,heart disease ,பலாப்பழம்,வைட்டமின் A,கண்பார்வை,வைட்டமின் சி,இதய நோய்

பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது. உடல் பலம் பெறும். வெறும் பலாப்பழத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.

Tags :