Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தினமும் நாவல் பழம் உண்டு வந்தால் புற்றுநோயை தவிர்க்கலாம்!

தினமும் நாவல் பழம் உண்டு வந்தால் புற்றுநோயை தவிர்க்கலாம்!

By: Monisha Wed, 23 Dec 2020 10:04:40 AM

தினமும் நாவல் பழம் உண்டு வந்தால் புற்றுநோயை தவிர்க்கலாம்!

தினமும் நாவல் பழம் உண்டு வந்தால் நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 30 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவது குறைவு என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பலவித வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

நாவல் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். மேலும் உங்களுக்கு நோய் வராமல் காக்க உதவும். நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும்.

cancer,jamun fruit,diabetes,liver,gallbladder ,புற்றுநோய்,நாவல் பழம்,நீரிழிவு,கல்லீரல்,பித்தப்பை

நாவல் பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஒரு சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் வீக்கம் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய நாவல் பழம் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் காலையில் சிறிது உப்பு சேர்த்த நாவல் பழங்களை சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் பித்தப்பைகளில் ஏற்பட்டிருக்கும் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைத்து உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Tags :
|
|