Advertisement

மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கற்பூரவல்லி!

By: Monisha Mon, 24 Aug 2020 12:34:22 PM

மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கற்பூரவல்லி!

கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இச்செடியின் மருத்துவ நன்மைகளை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டை வலி குணமடையும்.

கற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும். உடலில் இருக்கும் கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும். கற்பூரவல்லி இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளி, காய்ச்சல் சரியாகும்.

karpooravalli,health,cough,cold,health ,கற்பூரவல்லி,ஆரோக்கியம்,இருமல்,சளி,ஆரோக்கியம்

கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

கற்பூரவல்லி இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.

Tags :
|
|
|