Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்ய லிச்சி பழம் சாப்பிடலாம்!

இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்ய லிச்சி பழம் சாப்பிடலாம்!

By: Monisha Wed, 02 Sept 2020 12:14:22 PM

இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்ய லிச்சி பழம் சாப்பிடலாம்!

நமது உடலில் இதயமும், ஈரலும் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சி முதலிடத்தில் உள்ளது.

லிச்சி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.

protein,fat,fiber,health,lychee fruit ,புரதம்,கொழுப்பு,நார்ச்சத்து,ஆரோக்கியம்,லிச்சி பழம்

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

Tags :
|
|
|