Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பழங்களின் அரசியான மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

பழங்களின் அரசியான மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

By: Monisha Thu, 03 Sept 2020 2:00:29 PM

பழங்களின் அரசியான மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

பழங்களின் அரசி என்று அழைக்கப்படும் முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்ளுவோம்!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.

புற்றுநோயை குணப்படுத்தும்
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

பாலுணர்வு
பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

mango,health,immunity,eye vision,diabetes ,மாம்பழம்,ஆரோக்கியம்,நோய் எதிர்ப்பு சக்தி,கண் பார்வை,நீரிழிவு

கண் பார்வை தெளிவு பெறும்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவான கண் பார்வையைப் பெறலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. எனவே மாம்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

ஆரோக்கிய இதயம்
மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

Tags :
|
|