Advertisement

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோல்-கோல்!

By: Monisha Tue, 15 Sept 2020 11:19:37 AM

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோல்-கோல்!

நோல்-கோல் அல்லது ஜெர்மன் டர்னிப் என்றும் அழைக்கப்படும் கோஹ்ராபி(Kohlrabi), முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி மற்றும் காலே போன்ற காய்கறி வகைகளை சார்ந்தது. இந்த காய்கறி ஒரு ஆரஞ்சு பழத்தின் அளவு மற்றும் வடிவத்தை கொண்டது. இதன் இலை தண்டுகளில் ஒரு கொத்து இந்த காய்கறியின் வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த தண்டு காய்கறி ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்டது. இது அடர்த்தியான தோலைக் கொண்டது. இது வெளிர் பச்சை மற்றும் ஊதா நிறத்தை கொண்டது. மேலும் இதன் உள் பகுதி மஞ்சள் நிறத்தை கொண்டது.

ப்ருஷ் கோஹ்ராபி காய்கறியை பச்சையாக சாப்பிடலாம் அல்லது கீரைகளை போல சமைத்தும் சாப்பிடலாம். இது சாப்பிடுவதற்கு ப்ரோக்கோலி, முட்டைகோஸ் போன்ற சுவையை கொண்டது. இதன் இலைகள் கூட சாப்பிடக் கூடியவை. இதன் இலைகளில் தாதுக்கள், கரோட்டின்கள், வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. கோஹ்ராபி பொதுவாக உழவர் சந்தைகள், இயற்கை மளிகைக்கடைகள் மற்றும் ஆசிய மளிகைக் கடைகளில் கிடைக்கிறது.

கோஹ்ராபி காய்கறியில் ஏ, பி, சி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் கூறுகள் உள்ளன. ஒரு கப் கோஹ்ராபியில் 27 மில்லி கிராம் சோடியம் உள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் உள்ளது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

noolkol,vegetable,health,vitamins,minerals ,நோல்கோல்,காய்கறி,ஆரோக்கியம்,வைட்டமின்,தாதுக்கள்

கோஹ்ராபி வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் மிகக் குறைந்த அளவில் கொழுப்பு சத்தை கொண்டுள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவு, கொழுப்பு மேலாண்மை மற்றும் இரைப்பை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

கோஹ்ராபியில் ஆரஞ்சு நிறத்தை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிக்க உதவுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரலை சுத்தம் செய்ய இதன் தண்ணீர் பயன்படுகிறது.

கோஹ்ராபி அழற்சி எதிர்ப்பு பன்பை கொண்டுள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையை கட்டுபடுத்துகிறது.

கோஹ்ராபியில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் உள்ளது. இந்த சத்து கண்புரை உருவாவதை தடுக்கிறது. மேலும் இது கண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

Tags :
|