Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குண்டு குண்டு பூசணிக்காய் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்!

குண்டு குண்டு பூசணிக்காய் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்!

By: Monisha Thu, 10 Dec 2020 09:03:27 AM

குண்டு குண்டு பூசணிக்காய் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்!

குண்டு உடல்வாகை பெற்றவர்களை பூசணிக்காய் என்று பலர் அழைப்பது உண்டு. ஆனால் உடல் பருமனை குறைப்பதில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

பூசணிக்காயில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து காணப்படுகிறது. ஒரு கப் பூசணிக்காயில் 3 கிராம்
நார்ச்சத்துக்கள் உள்ளது. பூசணியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது உடல் எடையை குறைக்க உதவும். அதிக உடல் எடையை கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது.

பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பீட்டா கரோட்டின் உட்கொள்பவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

pumpkin,body weight,fiber,beta carotene,immunity ,பூசணிக்காய்,உடல் எடை,நார்ச்சத்து,பீட்டா கரோட்டின்,நோய் எதிர்ப்பு சக்தி

பலர் உடல் சூட்டால் அவதிப்படுவார்கள் அவர்களுக்கு உடல் சூட்டை தணிப்பதில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக வியாதியையும் குணப்படுத்த வல்லது.

இதயம் பலவீனமாக உள்ளவர்கள், வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் பலமாகும்.உடல் வலி உடையவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடல் வலி குன்னமாகும்.

உடலில் வலிமை குறைந்தவர்கள் பூசணிக்காய் விதைகளை நன்கு காயவைத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெரும்.

Tags :
|