Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அழகிய ரோஜா மலர் இதழ்களில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா?

அழகிய ரோஜா மலர் இதழ்களில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா?

By: Monisha Mon, 22 June 2020 3:13:54 PM

அழகிய ரோஜா மலர் இதழ்களில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா?

அழகிய ரோஜா மலர் இதழ்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ரோஜா இதழ்களைக் கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் அது பல்வேறு நோய்களுக்கு மருந்துக்காக பயன்படும். நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.

உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சரியாகிவிடும்.

rose flower,petals,health,medicine ,ரோஜா மலர்,இதழ்கள்,ஆரோக்கியம்,மருந்து

பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணமாகும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக் கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.

ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.

Tags :
|
|