Advertisement

மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா பழம்!

By: Monisha Thu, 15 Oct 2020 1:55:07 PM

மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா பழம்!

சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். தினந்தோறும் இரண்டு சப்போட்டா பழங்களை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் நீங்கும். ஆரம்பநிலை காசநோய் குணமடைய காச நோயினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே தினம்தோறும் சப்போட்டா பழ சாருடன், ஒரு நேந்திரன் பழமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் சில நாட்களில் குணமடையும்.

உடல் உஷ்ணம் ஏற்படும் சமயத்தில் ரத்தத்துடன் கலந்த பேதி உண்டாகும். இதனை சரிசெய்ய சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து பருகி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் உஷ்ணமானது குறைந்து சீதபேதி நிற்கும்.

பித்தம் நீங்க சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதனை நீக்க சப்போட்டா பழத்தை சாப்பிட்டு பின்னர் ஒரு ஸ்பூன் சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் நீங்கும்.

sapodilla fruit,health,heart disease,cough,fever ,சப்போட்டா பழம்,ஆரோக்கியம்,இதய நோய்,இருமல்,காய்ச்சல்

சப்போட்டா பழச்சாறை குடித்துவிட்டு, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடி, கொஞ்சம் கருப்பட்டி, இவைகளை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்துவர சாதாரண காய்ச்சல் குணமாகும்.

சப்போட்டா பழத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும். நாளடைவில் இருமல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.

சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை சாப்பிட்டு வருவதால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் சிறுநீர் பையில் இருந்து கற்கள் தடையின்றி வெளியேறிவிடும். இதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

Tags :
|
|