Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முளைக்கட்டிய சிறுதானியங்கள் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

முளைக்கட்டிய சிறுதானியங்கள் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

By: Nagaraj Mon, 16 Jan 2023 6:56:44 PM

முளைக்கட்டிய சிறுதானியங்கள் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சென்னை: முளைக்கட்டிய சிறுதானியங்கள் அளிக்கும் உடல் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முளைக்கட்டிய கொள்ளு: உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பை யைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது.

முளைக்கட்டிய கம்பு: உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.

முளைக்கட்டிய பச்சைப்பயறு: சருமப் பளபளப்புக்கு உதவுகிறது. மறதி நோயை கட்டுபடுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும்.

health,sprouts,grains,grains,benefits ,ஆரோக்கியம், முளைக்கட்டியது, கொள்ளு, தானியம், நன்மைகள்

முளைக்கட்டிய வெந்தயம்: சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள், தினமும் இதை ஒரு கப் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு கட்டுப்படும். பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள், வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்.

முளைகட்டிய எள், வேர்க்கடலை: மெலிந்த உடல் இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வர, உடல் எடை கூடும்; உடல் வலுப்பெறும். அதிகப் பசியை போக்கி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

முளைகட்டிய உளுந்து: புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது. நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள், உடல் வலுப்பெறுவதற்கு அதிகமாக முளை கட்டிய உளுந்தை சாப்பிடலாம்.

முளைக்கட்டிய அக்ரூட் மற்றும் பாதாம் பருப்புகள்: இவற்றில் ஊட்டச்சத்து இரு மடங்கு அதிகமாக உள்ளது. இதிலுள்ள பயோட்டின், விட்டமின் பி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா-6 கொழுப்பு அமிலம், புரதச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்றவை முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பொடுகு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்து, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Tags :
|
|
|