Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அனைத்துவிதமான காய்ச்சல்களை குணமாக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு!

அனைத்துவிதமான காய்ச்சல்களை குணமாக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு!

By: Monisha Wed, 16 Sept 2020 12:21:57 PM

அனைத்துவிதமான காய்ச்சல்களை குணமாக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு!

உடலுக்கு குளிர்ச்சியை தரும் மூலிகைகளுள் ஒன்றாக தண்ணீர் விட்டான் உள்ளது. இதன் இலை, கிழங்கு ஆகிய இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தது தான். தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவை கொண்டது. இதன் இலை பார்ப்பதற்கு ஊசி போன்ற வடிவில் இருக்கும். இதன் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து அதனை பொடி செய்து தினமும் இரண்டு வேளைகள் ஒரு கரண்டி வீதம் ஒரு டம்ளர் பாலில் ஒரு மாதம் வரை தொடர்ந்து குடித்து வர ஆண்மை குறைபாடு நீங்கும்.

தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து அதனை பொடி செய்து நெய்யில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட உடலுக்கு நல்ல பெலன் கிடைக்கும். அதுமட்டுமால்லாமல் உடலுக்கு குளிர்ச்சியை தரும். உடல் உள்ளுறுப்புகளின் காணப்படும் புண்களை குணப்படுத்தும்.

தண்ணீர் விட்டான் கிழங்கின் சாற்றை கால் எரிச்சல் இருக்கும் இடத்தில் காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் தடவி வர கால் எரிச்சல் குணமாகும்.

health,impotence,fever,diabetes,neurasthenia ,ஆரோக்கியம்,ஆண்மை குறைபாடு,காய்ச்சல்,நீரிழிவு,நரம்புத் தளர்ச்சி

சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படும். இந்த இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன் 2 ஸ்பூன் அளவு சர்க்கரை கலந்து தினமும் மூன்று வேளைகள், 5 நாட்கள் குடித்து வர நல்ல மாற்றம் ஏற்படும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியுடன் சுக்கு, மிளகு, திப்பிலி பொடிகள் சிறிதளவு கலந்து, தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்

100கிராம் வீதம் பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி, தண்ணீவிட்டான் கிழங்கு பொடி ஆகியவற்றை தினமும் பாலில் கலந்து குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து தினமும் குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியுடன் பால் சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

Tags :
|
|