Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உயர் இரத்த அழுத்த பிரச்னையிலிருந்து விடுபட உதவும் வால்நட் பருப்பு

உயர் இரத்த அழுத்த பிரச்னையிலிருந்து விடுபட உதவும் வால்நட் பருப்பு

By: Monisha Sat, 27 June 2020 3:16:29 PM

உயர் இரத்த அழுத்த பிரச்னையிலிருந்து விடுபட உதவும் வால்நட் பருப்பு

வால்நட் பருப்பில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன. வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது.

வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.

high blood pressure,walnuts,health,infections,women ,உயர் இரத்த அழுத்தம்,வால்நட் பருப்பு,ஆரோக்கியம்,நோய் தொற்று,பெண்கள்

இதய தசைகளை நன்கு வலுப்படுத்துகிறது. இதயத்தில் இரத்த ஓட்டங்கள் சீராக இருக்க உதவுகிறது. நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கிறது. பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. அதை கரைப்பதில் வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 100 கிராம் வால்நட்ஸை, 100 கிராம் தேனுடன் சேர்த்து கலந்து, 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

Tags :
|