Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உலர் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்..

உலர் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்..

By: Monisha Tue, 19 July 2022 8:30:14 PM

உலர் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள்..

உலர் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவைதான் என்றாலும் அதிகமாக உட்கொண்டால் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்பது குறித்து பார்ப்போம்.

குடல் பிரச்சினை: சாப்பிடும் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும். அதற்கேற்ப உலர் பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. குடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் நார்ச்சத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் நார்ச்சத்து அதிகமானால் குடலுக்கு பாதிப்பு உண்டாகும்.குறிப்பாக உலர்ந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது வாயு, வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உலர் பழங்களை குறைவாக உட்கொள்வதுதான் உடலுக்கும், குடலுக்கும் பாதுகாப்பானது.

எடை அதிகரிப்பு: தினமும் 250 கலோரி அளவு உலர் பழங்கள் உட்கொள்வது ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். மூன்று பேரீச்சம் பழம், இரண்டு டேபிள்ஸ்பூன் புளூபெர்ரி, இரண்டு அத்திப்பழம் சாப்பிடுவது சுமார் 60 கலோரிகளை வழங்கும். அதனால் சாப்பிடும் உலர் பழங்களின் கலோரி அளவை கருத்தில் கொள்ள வேண்டும்.

health,disadvantages,dry,fruits ,உலர், பழங்கள் ,ஆரோக்கியம்,ஆபத்து,

பற் சிதைவு: உலர் பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. உலர்ந்த பழங்களை அதிகம் சாப்பிடும்போது சர்க்கரையும் அதிகரித்து பற்சிதைவை ஏற்படுத்திவிடும். சில உலர்பழங்கள் பல் இடுக்குகளுக்குள் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. அவற்றை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் பல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும்.

உலர்பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் பருகுவது பற் சிதைவு அபாயத்தை குறைக்க உதவும்.உலர்பழங்கள் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டதும் பல் துலக்குவது அல்லது வாய் கொப்பளிப்பது பற்களில் படிந்திருக்கும் சர்க்கரையை அகற்ற உதவும்.

Tags :
|
|